![]() |
|
Friday, July 30, 2010
என் சிறைவாழ்க்கை..
Thursday, July 29, 2010
பரிச்சயமில்லாத இரயில் தோழி..
![]() |
|
எனை நானே கண்டேன் இன்று..
![]() | எனை நானே கண்டேன் இன்று தூளியிலே மழலையாக.. அடடா என் சந்தோசங்கள் கண்ணோரம் துளிகளாக.. இறைவா.. என் வாழ்வில் இந்நேரம் - இணையில்லா தருணம் எந்நாளும்.. உலகத்தின் வசந்தங்கள் எல்லாமும் - இவன் உருவத்தில் வந்ததது போலாகும்.. ஆயுள் முழுவதும் தவம் செய்தாலும் கிடைக்கா வரமே.. என் ஆவலை ஆயிரம் மடங்கு நிறைத்தாய் - என்றாலும் தகுமே.. உன் பேரழகை உலக மொழிகளில் உரைக்கத்தான் முடியுமா.. இந்தப் பேருலகில் அழகென்ற மற்றவையெல்லாம் ச்சும்மா.. என் வாழ்க்கை கரிசற்காடு.. நீ வந்தாய் மழைமுகிலோடு.. இனி புல்லினங்கள் செய்யுள்கள் பாடும் புதிதாய்ப் பூக்கும் பூக்களோடு.. - அரவிந்த் குமார்.பா |
Wednesday, July 28, 2010
உந்தன் காதல் கொள்வதற்கா..
![]() | உந்தன் காதல் |
எனக்கு மட்டும் சொல்லிவிடு..
![]() | உனதோ எனதோ எங்கேயடி தொலைந்தது நமதான காதல்.. என் காதல் மட்டும் சீனப் பெருஞ்சுவராய் இன்னமும்.. உனது மட்டும் எப்படியானது பெர்லின் சுவராய்.. 'உன்னை மறந்தால் மரணம்தான் எனக்கு ' - என்று கண் கலங்கிச் சொன்னாயே ஒரு நாள்.. ஓ.. உதடுகளால் எழுதியதை கண்ணீரால் அழித்துவிட்டாயோ.. உயிரைத் தொட்டுத் திரும்பும் சுவாசமெல்லாம் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறது எந்நேரமும்.. என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ இந்நேரம்.. 'உன் கண்கள் பிடிக்கும் - உன் புன்னகை பிடிக்கும் - உன் ஆணவம் பிடிக்கும் - உன் ஆளுமை பிடிக்கும் ' என்பாயே.. எப்படியடி மறந்தாய் ஒட்டு மொத்தமாய் உன்னை மட்டுமே பிடித்த என்னை.. என் மலர்ந்த இதயத்தில் எப்போதும் இருப்பவளே.. நான் கொடுத்த பூக்களை வாடிய பின்பும் பத்திரப்படுத்தி வைத்திருந்தாயே .. இப்போது என்ன செய்தாய் அவற்றை.. கிடக்கட்டும் என்று வைத்திருக்கிறாயே.. அல்லது குப்பைக் கூடைக்கு அனுப்பி விட்டாயா.. நீ வரும் கனவில் இருந்து உன் கையெழுத்து சிரிக்கும் காகிதம் - வரை எல்லாவற்றையும் நினைவகத்தின் முதலடுக்கிலேயே செதுக்கி வைத்திருக்கிறேன்.. நான் - நம் முதல் முத்தத்தைப் போல.. நம் முதல் முத்தமேனும் ஞாபகமிருக்கிறதா உனக்கு.. உன் பிறந்த நாளன்று நான் பரிசளித்த வண்ணத் துப்பட்டாவும் பட்டாம் பூச்சிக் கவிதையும் போதுமே.. மறக்க மறக்க பறைசாற்றும் என் காதலை.. எங்கே ஊமையாக்கி விட்டாயா அந்த உன்னத சின்னங்களை.. எல்லாம் சரி கடவுளே வந்தாலும் என் காதலை அழிக்க முடியாது என்றாயே.. எனக்கு மட்டும் சொல்லிவிடு.. கடைசியாய் உன் காதலை வந்து அழித்தது எந்தக் கடவுள் என்று.. - அரவிந்த் குமார்.பா |
பார்க்குமிடம் அத்தனையும்
![]() |
|
Tuesday, July 27, 2010
நீ பிரிந்து போனதும்..
![]() | நீ பிரிந்து போனதும் எனக்கு கவிதையெ ழுதுவதே மறந்து போனது.. உன் சிநேகம் தவிர்த்ததும் என் தேசத்தில் மேகம் பொழிவதை நிறுத்திக் கொண்டது.. நம் பிரிதலை நீ முன்மொழிகையில் என் தோட்டத்து மலர்களெல்லாம் தற்கொலை செய்து கொண்டன.. என் வீடு தேடிவந்து வண்ணத்துப் பூச்சியொன்று வருத்தம் தெரிவித்துப் போனது.. எங்கள் பாச நாய்க்குட்டி இந்த இருதயக் கொலை குறித்து விசாரணையில் இறங்கவாயென வினாவியது.. சுடிதார்ப் பெண்களெல்லாம் இப்போது எனக்கு உன் வேடம் தரித்தாற்போல் தெரிகிறது.. அல்லது உன் போல வேடம் தரித்ததாய்த் தெரிகிறது.. இருந்தாலும் என் சிந்தனைகள் உள்வாங்கும் எல்லா அலைவரிசையிலும் உன் ஞாபகமே ஒளிபரப்பாகிறது இரவும்.. பகலும்.. என் இருதயக் கோவிலின் கருவறை இருட்டடைந்தே கிடக்கிறது.. அதைப் புனரமைக்க யாரும் வரவில்லை இன்னமும்.. - அரவிந்த் குமார்.பா |
வார்த்தை தெரியவில்லை
![]() | வார்த்தை தெரியவில்லை உன் நளினத்தைப் புகழ.. மலர் - வாசமதை மொழியா லெப்படி எழுத.. சாரல் தொடங்கையிலே ஒரு சுகந்தம் பரவுமே - அதைப் போலி ருமடங்கு உனது மௌனமே.. உன் மெல்லிய நடைய ழகை முகில் சொல்லியபடி யலையும்.. அதுபோல்தான் - உன் புன்னகை கண்ட பூக்களின் நிலையும்.. கடலளவு மலையளவு பெருஞ் செல்வம் தந்தாலும் அவை வேண்டாம் - நகமளவு உன் ஸ்பரிசம் தருவாயா.. விழியழகு மொழியழகு அதையெ ல்லாம் மிஞ்சி விடும் உடையில்லா உடல ழகால் என் தோளில் சாய்வாயா.. என் பிஞ்சுத் தங்கமே.. நான் பெற்ற சிங்கமே.. - அரவிந்த் குமார்.பா |
கவித்தவம்
காதல் வரங்கொடுத்தாள்..
காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..
- அரவிந்த் குமார்.பா
என் வாழ்க்கை வளி
![]() | உயிரிலே மழையென ஒரு கோடிப் பூக்கள்.. உன் ஓரவிழிப் பார்வையிலே உருவான ஆற்றல்.. வெட்கப்பட்டு சிறுநேரம் வாய் பொத்திச் சிரித்தாய்.. மாநிலமே பயனுற மின்சாரம் கொடுத்தாய்.. கற்றைக் கூந்தல் அவிழ்த்தாய் புவியியல் மாற்றம்.. அவசரமாய் தரையிறங்கிய சூரியனுக்கு ஏமாற்றம்.. என் சிந்தனை ஒரு கானகம்.. நீ அந்தரத்தில் வானகம்.. சாரலின் கைகளில் தீப்பொறி தருகிறாய்.. செய்யாதே அது பெரும்பாதகம்.. என் நெஞ்சில் வலி ஆயிரம்.. போகும் வழி ஓரிடம்.. ஆய்வுகள் செய்து கண்டறிந்தேன்.. என் வாழ்க்கைக்கான வளி உன்னிடம்.. - அரவிந்த் குமார்.பா |
நெருக்கடி..
![]() | அந்தி வானம் போலவள் கூந்தல் வண்ணம்.. அவள் சிரித்தால் - பூக்கள் பேராசை கொள்ளும்.. இவள்தான் உன்னவள் என்றொரு எண்ணம் என்னை ஆட்டிப் படைக்குது நாளொரு வண்ணம்.. அவள் கள்ளப் பார்வைகள் பார்த்த நாள் முதல் என் உள்ளக் கூட்டிலே உடைந்த கோடுகள்.. அந்த அல்லல்பாட்டைத் தொகுக்கும் போது ஒரு வில்லுப் பாட்டே கிடைக்கும் போங்கள்.. என் சொந்த மூச்சையும் சொந்தமாக்கினாள் கொஞ்சல் வார்த்தையால் மந்தமாக்கினாள் இந்த வாக்கிலென் வாழ்க்கை போனதால் கொள்கை கோட்பாடுகள் கந்தலாக்கினாள்.. மந்திர வித்தைகள் கற்றவள் போலும் என் எந்திர மனதும் அவள் கண்டதும் சுழலும்.. தந்திரம் செய்தேன் பலிக்கவில்லை - அதனால் அவள் சுந்தர விழிகளுக்குள் சுயமாய் சரணடைந்தேன்.. முன்னம் எந்த நாளிலும் இப்படி எனக்கு நேர்ந்ததில்லை தீராத நெருக்கடி.. காதல் சுகமென்று நினைத்தேன் அது தப்படி.. அது தீக்குச்சி - தன் தலைக்கே வைக்கும் நெருப்படி.. - அரவிந்த் குமார்.பா |
தேவரகசியம்
என் மார்கிழித்த மலரே..
மறுத்தா விடுவாய்
என் காதலை..
குறைத்தா விடுவாய்
என் ஆயுளை..
கணந்தோறும்
என் மனம்
கனமாகக் காரணம் - உன்
விழியெனும்
விசம் தூவும் சாதனம்
அந்த விசயத்தை
சொல்கிறேன் - நான்
உன்னிடம்..
என் மூளையென்னும்
ஆலைக்குள்ளே
மூன்று நாட்களாய்
வேலை நிறுத்தம்
முகிழ்ந்த காதலை
மொழியலாமென்றால்
முதிர்ந்த நினைவுகள்
மூச்சை மிரட்டும்..
எந்த வார்த்தை
சொன்னால் - உன்னெஞ்சில்
பூ பூக்கும்..
எந்த நாளில்
வந்தால் - உன் பூவில்
தேன் கிடைக்கும்..
அந்த தேவரகசியம்
தெரிந்தால் போதும்
தெய்வ தரிசனம்
வேண்டாம்..
என் தேவியுன் கரம்
பிடிப்பேனென்றால்
மீதிப் பிறவியும்
வேண்டாம்..
- அரவிந்த் குமார்.பா
நல்வரவு
![]() | நீ என் வீட்டுக்கு வந்தாய்.. வண்டுகளெல்லாம் - என் வாசல் கதவு தட்டின.. நீ அமர்ந்ததும் Plastic Chair Platinum ஆனது போல பீற்றிக் கொண்டது.. நீ புரட்டிப் பார்த்த புத்தகங்கள் இப்போது - எனக்கு பகவத் கீதை.. உனக்கு காற்று வீசிய மின் விசிறிக்கு - இப்போது நான் விசிறி.. கண்ணாடித் தொட்டி மீன்களெல்லாம் உன்னைப் பார்த்து கண்ணடித்தன.. நீ ஆற வைத்து குடித்த காபி உன்னை சூடாய் குடித்தது.. நீ எழுந்து நின்றாய் எல்லா Tiles - களும் என்னை மிதியென்றன.. நீ நடந்து சென்றாய் அறைக் கதவின் திரைச் சீலைகள் வழி விட்டன.. நீ பேசினாய் தோட்டத்துக் குயில்கள் பாடுவதை நிறுத்திக் கொண்டன.. நீ தொட்டுப் பார்த்த பொருட்களெல்லாம் மோட்சம் பெற்றன.. நீ தொடமறந்த மற்றவையெல்லாம் மூர்ச்சையுற்றன.. நீ வந்ததால் கூடத்தில் இருந்த கடிகாரம் - அது மணி காட்ட மறந்தது.. வீட்டுக்குள் வளர்த்த அலங்கார ரோஜா - அதன் அகங்காரம் தீர்ந்தது.. - அரவிந்த் குமார்.பா |
Monday, July 26, 2010
கடவுளின் தேசம்
![]() | எங்கெங்கு காணினும் தண்ணீர்.. இங்கு மேகத்தில் வழியுது பூவாகப் பன்னீர்.. ஆகாயம் மறைக்கின்ற மரங்கள் - அவை ஆதாயம் பார்க்காமல் அள்ளித்தரும் கரங்கள்.. ஈரமே காயாத சாலை - அதைப் பார்த்தாலே பூக்குது என்னெஞ்சில் சோலை.. இயல்பாக இரண்டு கரை தொட்டு - அந்த நதி செல்லும் அழகிலே மலருமுயிர் மொட்டு.. விதை மண்ணில் விழுந்தாலே போதும் - அதை இயற்கையே கவனிக்கும் நேராது சேதம்.. நகரத்தில் மாசில்லா காற்று - நான் கவனித்தேன் பொய்யில்லை நிஜமான கூற்று.. மண்ணையே காணவில்லை எங்கும் - முழுக்க புல்லே மறைத்தெழில் புன்னகை பொங்கும்.. குனிந்தால் கிணறுகளில் எட்டும் - தண்ணீரைக் காய்ச்சினால் போதும் சர்க்கரையே கிட்டும்.. அதிசயம் மனிதனின் கொடுங்கை - பக்கம் இருந்தாலும் பச்சையாய் சிரிக்குது இயற்கை.. எப்போதும் சாரலும் தப்பாத தூரலும் கோடையே காணாத மாநிலம் - ஆம் அது - எவரையும் கவிஞராய் மாற்றிவிடும் கேரளம்.. - அரவிந்த் குமார்.பா |
பழைய காதலியின் கடிதம்..
![]() | எச்சரிக்கை செய்கின்றேன் என் கனவுக்குள் வராதே.. எட்டு திசை பூட்டிவிட்டேன் - ஆகவே என்னைத் தொடராதே.. உன் நச்சரிக்கும் ஞாபகங்களை காற்றோடு அனுப்பாதே.. நான் விட்டெறிந்த நினைவுகளை ஒட்டவைக்க நினைக்காதே.. செல்லப் பெயர் சொல்லி - என்னை இனிமேல் அழைக்காதே.. என்னுள்ளத் துயர் கொல்ல வழிகளேதும் தேடாதே.. பந்தமென்றும் சொந்தமென்றும் நம்முள்- ளெதுவும் கிடையாதே.. நடைபாதையிலெனைப் பார்த்தால் கூட போய்விடு மறுபடி பேசாதே.. புத்துயிர் கொண்டது போல் எண்ணிக் கொள் கலங்காதே - நீ வெற்றி கொள்ள பிறந்தவன் என்பதை மட்டும் மறக்காதே பச்சரிசிப் புன்னகையை துளியளவும் குறைக்காதே - நீ உச்சரிக்கும் கவிதைகளை ஒருபோதும் நிறுத்தாதே.. இன்னவள் உன்னுள்ளிருந்தாள் என்பதை நினைக்காதே.. இன்னொருத்தி உன்னிதயம் வெல்வாள் இன்னுயிரை வருத்தாதே.. எனக்கு மட்டும் உனைப் பிரிய விருப்பமா கிடையாதே.. மனக்குளத்தில் அமிழ்ந்திருக்கும் உன்னுருவம் மறையாதே.. சுற்றத்தின் கைகளில் சிக்கிக் கொண்ட நம் காதல் இனிமேல் பிழைக்காதே.. நான் சுவாசிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டேன் வேறெதுவும் என்னைக் கேட்காதே.. - அரவிந்த் குமார்.பா |
உன் நினைவில் மூழ்கி
![]() | உன் நினைவில் மூழ்கி நான் முத்தெடுக்கும் போதெல்லாம் கடிகாரத்துக்கு மட்டுமல்ல - சமயத்தில் காலண்டருக்கும் கூட கால் முளைத்துவிடுகிறது.. உன்னை வர்ணிக்க நிலவு என்னும் வார்த்தையை எடுத்தேன் - பார் மூன்றாம்பிறை பௌர்ணமியாகி விட்டது.. உன் தித்திக்கும் ஞாபகத்தில் திளைத்திருப்பதால் எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிடுமோ ? என்று கூட பயமாயிருக்கிறது.. வானவில்லுக்கும் உனக்கும் ஒரேயொரு வித்தியாசம் அது - வானத்தில் இருக்கிறது என்பது மட்டும்தான்.. கிளி ஜோசியம் பார்க்கப் போனாய்.. கிளிக்கு ஜோசியம் சொன்ன கிளி என்று பிரபலபடுத்திவிட்டாய் - அந்த பொய்க் கிளியை.. ஒரு மோகப் பொழுதில் உன் கூந்தல் நுகர்ந்தேன்.. நக்கீரரை நடு நெற்றியில் சுடத் தோன்றியது.. படிக்கப் படிக்க அலுக்காத பைந்தமிழ் கவிதை நீ சென்ற நூற்றாண்டின் சிறந்த கவிஞர் விருதை உன் தந்தைக்குதான் தர வேண்டும்.. உன் அழகை ஒரு வரியில் எழுதச் சொன்னாய்.. மன்னித்து விடு.. முடியாது.. வேண்டுமானால் மெகா சீரியல் எடுக்கிறேன்.. உன் மீதான என் காதலை எதன் மீதாவது ஒப்பிடச் சொன்னாய்.. தங்கமே.. தாஜ்மகால் கூட குடிசை என்றே நினைக்கிறேன்.. - அரவிந்த் குமார்.பா |
Sunday, July 25, 2010
நீ பார்த்ததில்தானடி
பைத்தியமானேன்..
உனைப் பார்த்திடத்தானடி
பத்தியமிருந்தேன்..
சிரித்தாயடி
நான் சிக்கிக் கொள்ளவே..
தவித்தேனடி
நான் தப்பிச் செல்லவே..
காதல் வானில் களித்தேன்..
உன் கண்ணில் என்னைத் தொலைத்தேன்..
அங்கேயும் இங்கேயும்
அரைப் பார்வை பார்த்தென்னை
முழுப் பார்வைக் - கிரையாக்கினாய்..
அலுங்காமல் குலுங்காமல்
அதிர்வொன்றும் நிகழாமல்
இதயத்தை இடமாற்றினாய்..
வாளைக்
கையோடு கொண்டே - நீ
போரிட்டால்
வீழ்த்திச் செல்வேனடி..
வளையல் கரத்தோடு
வந்தே - நீ
போரிட்டாய்
வீழ்ந்தே நின்றேனடி..
வெளியே வெளியே
என் உள்ளம் சொல்ல..
வழியேயின்றி
என் வாழ்க்கை செல்ல..
முடிவாய்ச் சொல் பெண்ணே
நான் என் செய்ய..
அதிகாலை வந்தாய் - நீ
அதனாலே கனவுக்கு
பரிவட்டம் தந்தேனடி..
நெடு நாளாய்
உறக்கத்தில் உழன்ற
என் கவிதைக்கு
ஒளிவட்டம் தந்தாயடி..
உன்னைப் பார்க்காத
வரைக்கும் - என்
முகத்திற்கு
சிரிப்பே தெரியாதடி..
உன் கண்கள்
பார்க்காத வரைக்கும் - என்
படைப்பிற்கு
பரிசே கிடையாதடி..
அழகின் அர்த்தம் - உன்
கண்கள் என்பேன்..
கொலையில் புத்தம் - உன்
கொள்கை என்பேன்..
சிறகோடு சிலுவையில்
அறைந்தால் - அதுதான்
காதல் என்பேன்..
- அரவிந்த் குமார். பா
நினைப்பு
மார்க்கம் இல்லை..
நினைப்பவர்க்கே
நீண்ட பயணம்..
மறத்தல்
வரம் இல்லை..
நினைத்தலே
தவம்..
நினைத்துச் செய்தல்
நின்று பேசப்படும்..
மறந்து செய்தன
எதேச்சை எனப்படும்..
மறந்து செய்பவர்
அரும்பு..
நினைத்துச் செய்பவர்
சுயம்பு..
கொடுத்ததை
மறக்கலாம்..
மறந்து கொடுத்தல்
கூடாது..
வாழ்க்கை ஒரு
நெடுஞ்சாலை..
நினைத்துச் செல்பவர்
இலக்கை அடைவர்..
மறந்து செல்பவர்..
விளக்கைத் தேடுவர்..
நினைத்தல் என்பது
ஞாபகக் குவியலின்
நினைவுப் பொதியல்ல..
தன்னையே நினைத்தல்..
நின்றல்.. நடத்தல்..
குளித்தல்.. களித்தல்..
இசைதல்.. அசைதல்..
என அத்தனையும்
நினைப்பே..
நினைப்போடு செய்தால்
அனைத்தும் வனப்பே..
நினைத்தலின் உச்சம்..
உறக்கத்தில் விழிப்பு..
கொணர்ந்து பார் கிடைக்கும்
வெற்றியின் சிலிர்ப்பு..
- அரவிந்த் குமார்.பா
Friday, July 23, 2010
இழப்பு
வந்ததென் காதல்..
இல்லையெந்தன்
கண்மணியே..
உன் பருவம் பார்த்தா
படர்ந்ததென் நேசம்
உண்மையைச் சொல்
என் உள்ளுயிரே..
மெதுவாய் மெதுவாய்
நிறைத்தாய் மனதை..
பின்னால்தானே
உரைத்தேன் கனவை..
உயிராய் உறவாய்
உணர்ந்தேன் உன்னை..
அதனால்தானே
தந்தேன் என்னை..
நட்பில் தொடங்கிய
நம் பந்தம்
காதலானதெப்போது..
எதுவும் எனக்குத்
தெரியாது..
அறிவியல்வாதிகள்
சொல்கின்ற
எதிர் பாலினர்
உணர்கின்ற
வேதியல் மாற்றமும்
கிடையாது..
நீதான்
எனக்குச் சரியென
நினைத்தேன்..
நினைத்ததை
நிகழ்த்த வழிகளை
வகுத்தேன்..
நண்பர்கள் துணை
வேண்டாமென்று
எடுத்தேன்
கவியெழுத
பேனாவொன்று..
நகர்ந்தன நாட்கள்
நரகத்தைப் போல
கனிந்தது காலம்
என் காதலைப் போல..
காதல் உரைத்தேன்
நான் தான் முதலில்
கண்ணியமாய்
மறுத்தாய்
உந்தன் பதிலில்..
அய்யோ அவசரம்
கொண்டேன் என்று
அழுதேன் நானும்
தனியறை சென்று..
நண்பர்கள் கேட்க
நலம்தான் என்று
சொன்னேன் - நா கூசாத
பொயொன்று..
எங்கே எதிலே
தவறிழைத்தேன்
விடுமுறை நாளில்
யோசித்தேன்..
சுத்தமான
என் அன்பில்
குற்றமேதும்
கண்டாளோ..
தோழியரின்
அறிவுரையில்
குழம்பிப்
போய் விட்டாளோ..
குழுங்கிக் குழுங்கி
அழுதேன்
குணக் குன்றே
நம் காதல்
கூடாதது கண்டு..
சிரிப்பு முகமூடி
அணிந்தேன்
சிவந்த கண்களை
மறைத்துக் கொள்ள..
குறிப்பு கண்டு
நொந்தேன்
கொலைக் குற்றம்
செய்தது போல..
என் பால் நெஞ்சம்
புரியாத பாவியவள்..
என் நூல் நெஞ்சை
அறுத்த ஆணியவள்..
என்னை இழந்ததால்
இழப்பு அவளுக்கு..
மழை தள்ளிப் போனால்
இழப்பு மண்ணுக்கு..
- அரவிந்த குமார்.பா
கிளிஞ்சல்கள்
மிதந்து வரும் வண்ணக் கிளிஞ்சல்களை
உன் சின்னப் பாதங்களில்
சமர்ப்பிக்கிறேன்..
இன்னும் எழவில்லை
என் இருதயத்தில்
எங்கே உயிர் நாதம்..
உன் பாதக் கொலுசுகளைப்
பாடவிடு கொஞ்சம்..
மின்னல் கீற்றுகளை
சேகரித்து
சேலை நெய்தவளே..
நீ ஜன்னல் மூடியதும்
செத்துவிடும் நெஞ்சம்..
மண்ணைத் தொடவந்த
மழைத்துளிகள்
மரித்துப்போவதில்லை..
உன்னையும் தொடுவேன் - நான்
அது போல ஒரு நாள்..
தண்ணீர் குளிருமென்றால்..
செந்தனல் கொதிக்குமென்றால்..
நீயும் எனதன்றோ மறுக்க-
வொண்ணுமோ உன்னால்...
வெண்ணிலா புகுவதே
விளையாட்டு எனக்கு..
உன்னெஞ்சம் புகுவதா
புரியாத கணக்கு..
- அரவிந்த் குமார்.பா
உன்னை நினைத்து..
உருளும் என் வாழக்கை..
எந்த தினத்தில் எந்த கணத்தில்
தீரும் இந்த வேட்கை..
சிந்தை முழுதும் உந்தன் உருவம்..
கந்தலானது எந்தன் கருவம்..
இந்த மாற்றங்கள் தந்தவளே
எரியும் நெஞ்சம் எப்போது அணையும்..
சாரலில் நனைகிறேன்
உன் தோளில் சாய்ந்த சுகமில்லை..
உன் தேடலில் திரிவதால்
நிகழ்வதெல்லாம் நினைவிலில்லை..
வானவில் கடக்கிறேன்
உன் துப்பட்டாவின் அழகில்லை..
சுவாசம் மட்டும் என்னிடம்
மிச்சத்தை உன்னிடம் மீட்கவேயில்லை..
நீதான் கண்மணி..
என் கனவுகள் முழுமைக்கும்
நெருப்பு வைத்தாய்..
எரிகிறேன் தினமும்
வாழ்கின்ற வாழ்க்கையை
வெறுக்க வைத்தாய்..
கண்ணீர் தொடாத விழிகளை
நீ உப்புக் கடல் போல்
கரிக்க வைத்தாய்..
மகிழ்ச்சி மறந்த
மனிதன் என்னை
மறுபடி எப்போது சிரிக்க வைப்பாய்..
- அரவிந்த் குமார்.பா
எப்ப வரும் இன்னோரு திருவிழா
காடக் குஞ்சுகளே..
வானந் தொறந்து வரும்
ஈரத் தூரல்களே..
கண்ணுல நிர் வழிய
நாம்படும் கஸ்டங்கள
கருத்தோட கொஞ்சம்
காதத் தொறந்து கேளுங்களேன்..
நானாப் போன வழி
தானா வந்தவதான்..
மானா மயிலிறகா
யோசிக்க வச்சவதான்..
வேணான்னு சொன்னாலும்
வெளங்காம நின்னவதான்..
வீணால்ல ஏம்மனச
வத்தி கிழிச்சு எரிச்சுப்புட்டா..
தேனாப் பொழிஞ்சான்னு
தெரியாம நம்பிப்புட்டேன்..
போனாப் போகுதுன்னு
பொசக் கழுதைய ஏத்துக்கிட்டேன்..
தூணா இருந்தவன
துரும்பால்ல ஆக்கிப்புட்டா..
வீரனா இருந்தவன
வெறும் பயலா மாத்திப்புட்டா..
வெள்ளம் வந்த ஊரப் போல
சீரழிச்சுப் போயிட்டாளே..
கொல்ல வந்த அம்பப் போல
மாரக் கிழிச்சுப் போயிட்டாளே..
நெலாவுல நடக்கிறதா
கனாவுல மெதந்தாலும்..
வெலாவுல ஓன்னெனப்பு
வின்னுன்னு குத்துதடி..
ரத்தத்துல கலந்துப்புட்ட
மொத்தத்துல நீ இப்ப..
ரோசங்கெட்ட மனசுக்குள்ள
சட்டமா நீ நிக்கெ..
என்னமோ என்ன நீ
ஏமாத்திப் போனாலும்
கொடங்கொடமா அனுபவத்த
ஏந்தலையிலதான் கொட்டிப்புட்ட..
என்னதான் அனுபவத்த
கொடுத்தாலும் போ புள்ள..
ஒன்னயே நம்புன
ஏம்மனசயில்ல வெட்டிப்புட்ட..
வருசம் ரெண்டு கழிஞ்சு
ஓம்மொகத்த நாம்பாத்தேன்..
நா ரசிச்சு காதலிச்ச
அந்த மொகம் காணமடி..
ஓன்னாச மொகத்த
மறுபடி நாம்பாக்க
இன்னோரு திருவிழா
என்னைக்கு விடியுமடி..
- அரவிந்த் குமார்.பா
Thursday, July 15, 2010
காதல் பெருங்கடலே ..
![]() | நெஞ்சுக்குள் உறும் உயிர்த் துளிகள் எல்லாம் ஓடையாகி , நதியாகி கடைசியில் உன்னிடம்தான் ஓடி வரும் என் காதல் பெருங்கடலே.. காய்கறி வாங்க கடைத் தெருவுக்குப் போவேன்.. கூடை நிறைய உன் ஞாபகங்களோடுதான் திரும்பி வருவேன்.. சில இரவுகள் போர்வையே விரிக்காமல் உறங்கியிருக்கிறேன் ஆனால் உன் பூமுகம் நினைக்காமல் நான் தூங்கியதில்லையடி ஒரு நாளும்.. விக்கல் எடுக்கும் சமயங்களில் நீ என்னை நினைப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறேன் நான்.. உன்னோடு நான் கடந்த ஒவ்வொரு வினாடிகளும் என் ஓரிரவுத் தூக்கத்தை வென்றழித்து விடுகிறது.. ஏப்ரல் வெயில் கூட எதுவும் செய்யவில்லை என்னை.. உன் தீக்கனல் பார்வை நினைத்தாலே என் தேகம் சுடுகிறது.. உன் சிரிப்புகள் என் கவிதையாகும்.. உன் கோபங்கள் என் கவலையாகும்.. ஆற்றல் அழிவின்மைக் கோட்பாட்டையே நான் உன்னிடம்தானடி கற்றுக் கொண்டேன் .. புலன்கள் ஐந்தும் போதவில்லை எனக்கு.. பொக்கிசமே.. உன் நினைவில் ஜீவன் சேர்ப்பதற்கு.. - அரவிந்த் குமார். பா |
ஊடல் ..
![]() | உயிரே நீயென உணருகிறேன் உன் நினைவால் இதயம் சிதறுகிறேன் .. உன் காதல் கொண்டாடி தீர்த்தவன் உன் ஊடலால் கண்ணீரைத் தீர்க்கிறேன்.. உன் பனிச் சிரிப்பில் உணர்வு கரைந்தவன் உன் துளிக் கோபத்தில் உடைகிறேன் உடைகிறேன்.. வானமானவளே.. உன் இரவுச் சோலையிலே ஒற்றை விண்மீனாய் நீந்த வேண்டுகிறேன்.. சேனைத் திரட்டி வந்து உன் ஞாபகம் விழிகளில் இறங்கியது.. ஆணை பிறப்பிக்கிறேன் என் ஐம்புலனும் அசைய மறுக்கிறது.. யானைப் படை மூலம் உன்னை வீழ்த்த வழி வகுத்தேன்.. மானைக் கொல்லோம் என - அவை என் ஊனைச் சிதைக்குதடி.. இனியவளே எனைத் தனியனாய் ஆக்கிவிட்டாய்.. இதயத்தில் புகுந்து உனதென்று மாற்றி விட்டாய்.. சோகம் எதுவுமில்லை என் சொந்தமனவளே.. உன்னைத் தவிர நான் யாரிடம் தோற்கப்போகிறேன்.. - அரவிந்த் குமார்.பா |
Wednesday, July 14, 2010
அன்புள்ள தந்தைக்கு
என் தமிழ் அத்தனையும்
அர்ப்பணம் உங்களுக்கு...
இன்றளவும்
என் இரத்தத்தோடு
நீங்கள் ஊட்டி வளர்த்த
வீரமும், வலிமையையும்
கர்வமும், கவிதையும்...
அன்புக்கு மட்டுமே
அடிபணிகிறேன்
உங்களைப் போலவே
நானும்...
அச்சம் என்பதை
நான் அறியாமலேயே
வளர்ந்ததற்கு
அன்புத் தந்தையே
நீங்கள்தானே காரணம்...
அப்பா..
உங்கள் அறிவுரையின்
ஞாபகங்களோடுதான்
ஆரம்பமாகின்றன
என் செயல்கள் ஒவ்வொன்றும்...
வெற்றிகளுக்கு மயங்காமலும்
தோல்விகளுக்கு கலங்காமலும்
நான் இருப்பதெல்லாம்
உங்களை நினைப்பதால்தான் அப்பா ...
என் இலட்சியமும் சிந்தனைகளும்
எரிந்து கொண்டே இருக்கும்
அணையாமல் ...
அது -
எனக்குள் நீங்கள்
வைத்த நெருப்பு ..
நான்
உங்களுக்கு வைத்ததைப் போல ...
- அரவிந்த் குமார் . பா