![]() | எங்கெங்கு காணினும் தண்ணீர்.. இங்கு மேகத்தில் வழியுது பூவாகப் பன்னீர்.. ஆகாயம் மறைக்கின்ற மரங்கள் - அவை ஆதாயம் பார்க்காமல் அள்ளித்தரும் கரங்கள்.. ஈரமே காயாத சாலை - அதைப் பார்த்தாலே பூக்குது என்னெஞ்சில் சோலை.. இயல்பாக இரண்டு கரை தொட்டு - அந்த நதி செல்லும் அழகிலே மலருமுயிர் மொட்டு.. விதை மண்ணில் விழுந்தாலே போதும் - அதை இயற்கையே கவனிக்கும் நேராது சேதம்.. நகரத்தில் மாசில்லா காற்று - நான் கவனித்தேன் பொய்யில்லை நிஜமான கூற்று.. மண்ணையே காணவில்லை எங்கும் - முழுக்க புல்லே மறைத்தெழில் புன்னகை பொங்கும்.. குனிந்தால் கிணறுகளில் எட்டும் - தண்ணீரைக் காய்ச்சினால் போதும் சர்க்கரையே கிட்டும்.. அதிசயம் மனிதனின் கொடுங்கை - பக்கம் இருந்தாலும் பச்சையாய் சிரிக்குது இயற்கை.. எப்போதும் சாரலும் தப்பாத தூரலும் கோடையே காணாத மாநிலம் - ஆம் அது - எவரையும் கவிஞராய் மாற்றிவிடும் கேரளம்.. - அரவிந்த் குமார்.பா |
Monday, July 26, 2010
கடவுளின் தேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment