![]() | உன் நினைவில் மூழ்கி நான் முத்தெடுக்கும் போதெல்லாம் கடிகாரத்துக்கு மட்டுமல்ல - சமயத்தில் காலண்டருக்கும் கூட கால் முளைத்துவிடுகிறது.. உன்னை வர்ணிக்க நிலவு என்னும் வார்த்தையை எடுத்தேன் - பார் மூன்றாம்பிறை பௌர்ணமியாகி விட்டது.. உன் தித்திக்கும் ஞாபகத்தில் திளைத்திருப்பதால் எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிடுமோ ? என்று கூட பயமாயிருக்கிறது.. வானவில்லுக்கும் உனக்கும் ஒரேயொரு வித்தியாசம் அது - வானத்தில் இருக்கிறது என்பது மட்டும்தான்.. கிளி ஜோசியம் பார்க்கப் போனாய்.. கிளிக்கு ஜோசியம் சொன்ன கிளி என்று பிரபலபடுத்திவிட்டாய் - அந்த பொய்க் கிளியை.. ஒரு மோகப் பொழுதில் உன் கூந்தல் நுகர்ந்தேன்.. நக்கீரரை நடு நெற்றியில் சுடத் தோன்றியது.. படிக்கப் படிக்க அலுக்காத பைந்தமிழ் கவிதை நீ சென்ற நூற்றாண்டின் சிறந்த கவிஞர் விருதை உன் தந்தைக்குதான் தர வேண்டும்.. உன் அழகை ஒரு வரியில் எழுதச் சொன்னாய்.. மன்னித்து விடு.. முடியாது.. வேண்டுமானால் மெகா சீரியல் எடுக்கிறேன்.. உன் மீதான என் காதலை எதன் மீதாவது ஒப்பிடச் சொன்னாய்.. தங்கமே.. தாஜ்மகால் கூட குடிசை என்றே நினைக்கிறேன்.. - அரவிந்த் குமார்.பா |
Monday, July 26, 2010
உன் நினைவில் மூழ்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment