Sunday, July 25, 2010

நினைப்பு

மறப்பவர்க்கு
மார்க்கம் இல்லை..
நினைப்பவர்க்கே
நீண்ட பயணம்..

மறத்தல்
வரம் இல்லை..
நினைத்தலே
தவம்..

நினைத்துச் செய்தல்
நின்று பேசப்படும்..
மறந்து செய்தன
எதேச்சை எனப்படும்..

மறந்து செய்பவர்
அரும்பு..
நினைத்துச் செய்பவர்
சுயம்பு..

கொடுத்ததை
மறக்கலாம்..
மறந்து கொடுத்தல்
கூடாது..

வாழ்க்கை ஒரு
நெடுஞ்சாலை..
நினைத்துச் செல்பவர்
இலக்கை அடைவர்..
மறந்து செல்பவர்..
விளக்கைத் தேடுவர்..

நினைத்தல் என்பது
ஞாபகக் குவியலின்
நினைவுப் பொதியல்ல..
தன்னையே நினைத்தல்..

நின்றல்.. நடத்தல்..
குளித்தல்.. களித்தல்..
இசைதல்.. அசைதல்..
என அத்தனையும்
நினைப்பே..
நினைப்போடு செய்தால்
அனைத்தும் வனப்பே..

நினைத்தலின் உச்சம்..
உறக்கத்தில் விழிப்பு..
கொணர்ந்து பார் கிடைக்கும்
வெற்றியின் சிலிர்ப்பு..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment