Tuesday, July 27, 2010

நல்வரவு





நீ
என் வீட்டுக்கு வந்தாய்..
வண்டுகளெல்லாம் - என்
வாசல் கதவு
தட்டின..

நீ
அமர்ந்ததும்
Plastic Chair
Platinum
ஆனது போல
பீற்றிக் கொண்டது..

நீ புரட்டிப் பார்த்த
புத்தகங்கள்
இப்போது - எனக்கு
பகவத் கீதை..

உனக்கு
காற்று வீசிய
மின் விசிறிக்கு - இப்போது
நான் விசிறி..

கண்ணாடித் தொட்டி
மீன்களெல்லாம்
உன்னைப் பார்த்து
கண்ணடித்தன..

நீ
ஆற வைத்து
குடித்த காபி
உன்னை
சூடாய் குடித்தது..

நீ
எழுந்து நின்றாய்
எல்லா
Tiles - களும்
என்னை மிதியென்றன..

நீ
நடந்து சென்றாய்
அறைக் கதவின்
திரைச் சீலைகள்
வழி விட்டன..

நீ
பேசினாய்
தோட்டத்துக் குயில்கள்
பாடுவதை
நிறுத்திக்
கொண்டன..

நீ
தொட்டுப் பார்த்த
பொருட்களெல்லாம்
மோட்சம்
பெற்றன..

நீ
தொடமறந்த
மற்றவையெல்லாம்
மூர்ச்சையுற்றன..

நீ
வந்ததால்
கூடத்தில் இருந்த
கடிகாரம் - அது
மணி காட்ட
மறந்தது..

வீட்டுக்குள்
வளர்த்த
அலங்கார ரோஜா - அதன்
அகங்காரம்
தீர்ந்தது..

- அரவிந்த் குமார்.பா



No comments:

Post a Comment