Tuesday, July 27, 2010

நெருக்கடி..




அந்தி வானம் போலவள்
கூந்தல் வண்ணம்..
அவள் சிரித்தால் - பூக்கள்
பேராசை கொள்ளும்..

இவள்தான் உன்னவள்
என்றொரு எண்ணம்
என்னை ஆட்டிப் படைக்குது
நாளொரு வண்ணம்..

அவள் கள்ளப் பார்வைகள்
பார்த்த நாள் முதல்
என் உள்ளக் கூட்டிலே
உடைந்த கோடுகள்..

அந்த அல்லல்பாட்டைத்
தொகுக்கும் போது
ஒரு வில்லுப் பாட்டே
கிடைக்கும் போங்கள்..

என் சொந்த மூச்சையும்
சொந்தமாக்கினாள்
கொஞ்சல் வார்த்தையால்
மந்தமாக்கினாள்

இந்த வாக்கிலென்
வாழ்க்கை போனதால்
கொள்கை கோட்பாடுகள்
கந்தலாக்கினாள்..

மந்திர வித்தைகள்
கற்றவள் போலும்
என் எந்திர மனதும்
அவள் கண்டதும்
சுழலும்..

தந்திரம் செய்தேன்
பலிக்கவில்லை - அதனால்
அவள் சுந்தர விழிகளுக்குள்
சுயமாய் சரணடைந்தேன்..

முன்னம் எந்த நாளிலும்
இப்படி
எனக்கு நேர்ந்ததில்லை
தீராத நெருக்கடி..

காதல் சுகமென்று
நினைத்தேன்
அது தப்படி..

அது தீக்குச்சி - தன்
தலைக்கே வைக்கும்
நெருப்படி..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment