![]() |
|
உலறல்கள்
உள்ள முற்றம் உள்ள மட்டும்..
Monday, August 2, 2010
செவத்தவளே..
காதல் சொல்ல வந்தாள்
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.
நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.
இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..
படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..
தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..
முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..
மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..
சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..
தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..
கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..
கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..
காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..
- அரவிந்த் குமார்.பா
பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..
எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..
கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..
மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..
கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..
ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..
- அரவிந்த் குமார்.பா
கனல் நிலவே
![]() |
|
Friday, July 30, 2010
என் சிறைவாழ்க்கை..
![]() |
|
Thursday, July 29, 2010
பரிச்சயமில்லாத இரயில் தோழி..
![]() |
|
எனை நானே கண்டேன் இன்று..
![]() | எனை நானே கண்டேன் இன்று தூளியிலே மழலையாக.. அடடா என் சந்தோசங்கள் கண்ணோரம் துளிகளாக.. இறைவா.. என் வாழ்வில் இந்நேரம் - இணையில்லா தருணம் எந்நாளும்.. உலகத்தின் வசந்தங்கள் எல்லாமும் - இவன் உருவத்தில் வந்ததது போலாகும்.. ஆயுள் முழுவதும் தவம் செய்தாலும் கிடைக்கா வரமே.. என் ஆவலை ஆயிரம் மடங்கு நிறைத்தாய் - என்றாலும் தகுமே.. உன் பேரழகை உலக மொழிகளில் உரைக்கத்தான் முடியுமா.. இந்தப் பேருலகில் அழகென்ற மற்றவையெல்லாம் ச்சும்மா.. என் வாழ்க்கை கரிசற்காடு.. நீ வந்தாய் மழைமுகிலோடு.. இனி புல்லினங்கள் செய்யுள்கள் பாடும் புதிதாய்ப் பூக்கும் பூக்களோடு.. - அரவிந்த் குமார்.பா |